தேசிய விருது இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா

11நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் எந்த படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில், தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரம்மா ‘குற்றம் கடிதல்’ வெற்றிக்குப் பிறகு, தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவானவுடன் ஜோதிகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries