கூகுள் ஊழியர்களை நேரில் சந்தித்த கமல்

qcpjyzgehcfhbசமீபத்தில் அமெரிக்காவின் புகழ் வாய்ந்த ஹார்வர்கு பல்கலைக் கழகத்தில் கமல்ஹாசன் பேசினார். ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற தலைப்பில் இடம் பெற்ற அவரது உரை பெரும் வரவேற்பை பெற்றது.

இந்திய திரை உலக நடிகர்களில் இந்த வாய்ப்பை அவர் பெற்றதை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டினார்கள்.

இந்த நிலையில் கமல் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, பாஸ்டன் நகரில் உள்ள ‘கூகுள்’ அலுவலகத்துக்கும் சென்றார். அங்கு அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். விவாதத்திலும் பங்கேற்றார்.

இந்த சந்திப்பின்போது ‘கூகுள்’ அதிகாரிகள் – ஊழியர்களுடன் கமல் மனம் திறந்து பேசினார். தனது கருத்துக்களை தெரிவித்தார். உற்சாகமாக உரையாடினார்கள்.

அவர்களுடன் ‘செல்பி’ எடுத்து உற்சாகத்தை கொண்டாடி மகிழ்ந்தார். அதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்திலும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கூகுளையே கூகுள் செய்து சில கூகுள்களை நிர்வகித்த போது கூகுளுக்குள் ஏராளமான விஷயங்கள் இருப்பதை கண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல் கூகுள் அலுவலகம் சென்று நிர்வாகிகள் – ஊழியர்களை சந்தித்து மகிழ்ந்ததை ஒரு ரசிகர், ‘எல்லோரும் கூகுளுக்குள் சென்று எடுத்த புகைப்படங்களை தேடுவார்கள். ஆனால் கமல் கூகுளுக்குள் சென்று புகைப்படம் எடுத்திருக்கிறார்’ என்று கமலின் பெருமையை கூறி இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries