சிம்பு கோவை மாவட்ட போலீசில் 24-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Simbuநடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல்கள் கடந்த டிசம்பர் மாதம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசாரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக நடிகர் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, அவர் மீது பதிவான வழக்குகளில் உள்ள சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜனவரி 29-ந் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு சிம்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடந்த ஜனவரி 5-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் சிம்பு 2 மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

ஒரு மனுவில், ‘கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். மற்றொரு மனுவில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன்பு ஆஜராக காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், ‘மனுதாரர் சிம்பு 24-ந் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். பின்னர், அதுதொடர்பான அறிக்கையை 25-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மனுதாரர் சிம்பு மீது பதிவு செய்த வழக்கை விசாரிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries