காட்டுவாசியாக மாறும் ஆர்யா

arya-2சமீபத்தில் ஆர்யா நடிப்பில் ‘பெங்களூர் நாட்கள்’ வெளியானது. இதில் ஆர்யாவுடன் ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த ‘மஞ்சப்பை’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ராகவா இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா காட்டுவாசி இனத்தை சேர்ந்தவராக நடிக்க இருக்கிறார். ஆர்யா இதற்குமுன் ‘உருமி’ படத்தில் காட்டுவாசி தலைவனாக நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் மூலம் மீண்டும் காட்டுவாசி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை விறுவிறுப்பான அட்வெஞ்சர் படமாக உருவாக்க இருக்கிறார்கள். கேரளாவில் உள்ள அதிரபள்ளி மற்றும் கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online