அரசியலில் குதித்த திரிஷா

trishaதமிழ் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்து புகழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது திரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார். ஆனால், திரிஷா குதித்தது நிஜ அரசியலில் அல்ல, தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கொடி’ படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

‘காக்கி சட்டை’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் அடுத்த படம் ‘கொடி’.

இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் தனுஷ் கட்சி மேடையில் பேசுவது போன்று புகைப்படம் வெளியானது. அதுபோல் தற்போது திரிஷா அரசியல்வாதி வேடத்தில் தோன்றும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் திரிஷா, ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online