இறுதிக் கட்டத்தில் விஷாலின் மருது

hqdefault‘கதகளி’ படத்திற்குப் பிறகு விஷால் தற்போது ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கொம்பன்’ பட இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். மேலும் ‘தாரை தப்பட்டை’ வில்லன் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ராஜபாளையத்தில் நடந்து வருகிறது. இங்கு விஷாலுடன் ஆர்.கே.சுரேஷ் மோதும் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு அமைத்திருக்கிறார்.

இன்னும் பத்து நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. இப்படத்திற்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ படத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online