பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்: சமந்தா

Samantha-Shines-With-Jewel-One-Photos-1சமந்தா தமிழில் விஜய்யுடன் ‘தெறி’, சூர்யாவுடன் ‘24’ மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். உடலை அளவோடு வைத்திருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

50 கிலோ எடை கொண்ட சமந்தா சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் 100 கிலோ எடையை 3 முறை தூக்கினார். அதை வீடியோவாக படம் பிடித்து இணைய தளத்திலும் வெளியிட்டு இருந்தார். இதை அவரால் எப்படி சாதிக்க முடிந்தது என்று கேட்ட போது….

‘பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதற்கு எனது இந்த முயற்சியும் ஒரு உதாரணம். நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைவது அதிர்ஷ்டம். சிறந்த நடிகை என்ற பெயரை தக்கவைக்க வேண்டும். இதற்காக போராடுகிறேன். எனது முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online