கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி?

udhayanidhi-stalin-karthik-subbaraj‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது ‘இறைவி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மார்ச் 25ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக உதயநிதியை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நண்பேன்டா’, ஆகிய படங்களுக்குப் பிறகு இறுதியாக ‘கெத்து’ படத்தில் உதயநிதி நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது.

இப்படத்திற்குப் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் யார்? என்பது இதுவரை வெளியிடாமல் இருந்தார்கள். தற்போது இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக கூறுகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries