படவிழாக்களுக்கு நடிகைகள் சேலை கட்டி வரவேண்டும்: அபிராமி ராமநாதன்

Aagam Movie Audio Launch Stills

‘ஆகம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் இர்பான், தீக்சிதா, பெயப்பிரகாஷ், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.

விழாவுக்கு நடிகைகள் கவர்ச்சி உடையில் வந்து இருந்தனர். இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

‘‘சினிமாவுக்கு நிறைய புதுமுக நடிகர்-நடிகைகள் வருகிறார்கள். இந்த தொழிலுக்கு வந்தவர்களால் வேறு தொழிலுக்கு போக முடியாது. மக்களின் கவலைகளை மறக்கச்செய்யும் தொழில் சினிமாதான்.

சினிமாவை தூக்கி நிறுத்துவது பாடல்கள். தியாகராஜ பாகவதர் காலத்தில் ஒரு படத்தில் 24 பாடல்கள் வரை இருந்தன. ஆகம் படத்தில் நடித்த நடிகைகள் ஆங்கிலத்தில் பேசினார்கள்.

தமிழ் தெரிந்தவர்களே ஆங்கிலத்தில் பேசுவது வருத்தமளிக்கிறது. நடிகைகள் தமிழில்தான் பேச வேண்டும். இந்த விழாவுக்கு நடிகைகள் எதையோ மாட்டிக்கொண்டு வந்து இருக்கிறார்கள்.

பட விழாக்களுக்கு நடிகைகள் சேலை கட்டி வரவேண்டும். என்னை இங்கு நடிகர் என்று சொல்லி அழைத்தனர். அது தவறு இல்லை. நான் சிறு வயதில் நேரு பற்றிய ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன்.

அதன்பிறகு குடும்பத்தினர் நடிக்க விடாததால் தியேட்டர் ஆரம்பித்தேன். பட வினியோகம் செய்தேன். படம் தயாரிக்கவும் ஆரம்பித்தேன். என்னிடம் நான்கு தியேட்டர்கள் இருக்கிறது.

ஒவ்வொரு படமும் இரண்டு வாரம் ஓடினாலே எனக்கு ஒரு தியேட்டருக்கு வருடம் 26 படம் வேண்டும். நான்கு தியேட்டருக்கும் 104 படங்கள் வேண்டும். அதனால் என் தியேட்டருக்கு வருபவர்களுக்கு கார் வசதி செய்து கொடுத்து அதற்கான கட்டணத்தையும் வாங்குகிறோம். திருட்டு வி.சி.டி படங்கள் தியேட்டர் படங்களுக்கு ஈடாகாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் கோட்டீஸ்வரராவ், ஹேமா ராஜு உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online