டெட் பூல் – திரை விமர்சனம்

06f02dcb661872847e3253c918ed7acbஎக்ஸ்மென் பட வரிசையில் 8-வதாக வந்துள்ள படம்தான் டெட் பூல். நாயகன் ரெனால்ட்ஸ் அமெரிக்காவின் முன்னாள் ராணுவத்தில் பணியாற்றி பிறகு அதிலிருந்து விலகி, இவர் வசிக்கும் நகரில் சிறுசிறு அடி தடி வேலைகளை செய்து வருகிறார்.

இதற்கிடையில் இவருக்கும் மொரைனாவுக்கும் காதல் வளர, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ரெனால்ட்ஸ்க்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது. இதனால், மொரைனாவை விட்டு பிரியும் ரெனால்ட்சின் கேன்சரை குணப்படுத்துவதாக கூறி ஸ்கெரின் என்பவர் அவரை ரகசிய இடத்துக்கு கூட்டிச் செல்கிறார்.

ஆனால், ஸ்கெரின், கரோனாவுடன் சேர்ந்து மனிதர்களின் ஜீன்களில் இருந்து ஒருவிதமான சக்தியை எடுத்து, அவர்களை இயந்திரங்களாக மாற்றும் வேலைகளை செய்து வருகிறார்கள். இருப்பினும், இது தெரியாமலேயே அவர்களின் சதி வலையில் சிக்கி விடுகிறார் ரெனால்ட்ஸ்.

அதன்பிறகு, ரெனால்ட்ஸுக்கு கேன்சர் சரியாகிவிட்டாலும், இவருடைய முகம் மற்றும் உடம்பு அனைத்துமே கொடூரமாக மாறிவிடுகிறது. இதனால், வெளியில் தலைகாட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதற்காக மூகமூடி அணிந்துகொண்டு டெட் பூலாக மாறுகிறார் ரெனால்ட்ஸ்.

பின்னர், ரெனால்ட்ஸ் தன்னை இந்த நிலைமைக்கு மாற்றியவர்களை எப்படி பழிவாங்கினார்? என்பதே மீதிக்கதை.

படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். ரெனால்ட்ஸ் பேசும் வசனங்கள் எல்லாம் தியேட்டரில் மிகப்பெரிய சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.

அதேபோல், ரெனால்ட்ஸ் செய்யும் சிறு சிறு பாவனைகள் கூட ரசிக்க வைக்கின்றன. மார்வெல் காமிக்ஸ் என்பதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு.

நாயகி மொரைனா பார்க்க அழகாகவும், கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். அதேபோல், வில்லி வேடத்தில் வரும் ஜினா கரானோ பார்க்கவே மலைக்க வைக்கிறார். சண்டைக் காட்சியிலும் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்கெரின் அழகான வில்லனாக வந்து பளிச்சிடுகிறார்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கின்றன. கார் சேசிங் காட்சிகளெல்லாம் நம்மை பதைபதைக்க வைக்கின்றன. இயக்குனர் டிம் கில்லர் ஒரு அழகான ஆக்ஷன் கதையை காமெடி கலந்து அனைவரையும் ரசிக்க வைத்தது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் ‘டெட் பூல்’ காமெடி ஆக்ஷன்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online