தோழா படத்தின் டீசர், இசை வெளியீடும் தேதி அறிவிப்பு

377268-thozaகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தோழா’. இதில் கார்த்தி ஜோடியாக ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகியப் படங்களில் இவருக்கு இணையாக நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா நடித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகார்ஜுன் தமிழில் நடித்திருக்கிறார்.

ஒரு மாற்று திறனாளிக்கும், மனரீதியாக பெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனுக்கும் நடக்கும் போராட்டமே ‘தோழா’ படத்தின் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீசர் வரும் 20ம் தேதி வெளியிட இருக்கின்றனர். மேலும் படத்தின் இசையை 26ம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பி.வி.பி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் ராஜ், விவேக், ஜெய சுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries