உதயநிதியுடன் இணைந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடி கிடைச்சாச்சு

udhayanidhi-stalin-manjima-mohan-vishnu-vishal-in-new-movie-by-suseenthiran-tamil-news-1000x509உதயநிதியும், விஷ்ணு விஷாலும் முதன்முதலாக ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இருப்பினும், விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தேடும் படலம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கும் நாயகி கிடைத்திருக்கிறது.

‘ஒரு பக்க கதை’ படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ள மேகா ஆகாஷ் என்பவர்தான் இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் இருவரும் நடித்த படங்கள் இதுவரை வெளியாகாத சூழ்நிலையில், தற்போது அவர்களுக்கு முன்னணி நடிகர்கள், இயக்குனரின் படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

விஷ்ணு, மேகா சம்பந்தப்பட்ட காட்சிகளை மார்ச் 18-ந் தேதி படமாக்கவிருக்கிறார்கள். இப்படம் நட்பை மையப்படுத்தி உருவாகி வருகிறது. உதயநிதி, விஷ்ணு இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online