நடிகைகள் கவர்ச்சிக்கு மாறக்கூடாது: காஜல் அகர்வால்

Kajal_Aggarwal_3காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிறது. தமிழ், தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த வருடம் காஜல் அகர்வால் நடித்து மாரி, பாயும்புலி ஆகிய படங்கள் வந்தன. தெலுங்கிலும் ஒரு படம் வெளியானது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பிரம்மோற்சவம்’ படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார். ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவாவுடன் நடிக்கிறார். கதாநாயகிகள் பலர் மார்க்கெட்டை தக்க வைக்க கவர்ச்சிக்கு மாறுகின்றனர்.

ஆனால் காஜல் அகர்வால் கவர்ச்சி எல்லையை தாண்டாமலேயே பட உலகில் நிலைத்து நின்று சக நடிகைகளை ஆச்சரியப்படுத்துகிறார். இதுகுறித்து காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

‘‘கதாநாயகிகள் அழகாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக நடிகைகளும் நடிக்க வந்த புதிதில் தங்களை அழகுபடுத்த அதிகம் மெனக்கெடுகிறார்கள் நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்த பிறகு புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கவர்ச்சிக்கு மாறி விடுகின்றனர். இதற்காக குட்டைப்பாவாடை அணிந்து கவர்ச்சியின் எல்லையை மீறுகின்றனர்.

அரைகுறை உடைகள், குட்டைப்பாவாடை அணிவதுதான் அழகு, கவர்ச்சி என்று நினைப்பது தவறு. டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிவதில் தான் கூடுதல் அழகு இருக்கிறது. சேலை அணிவது இன்னும் அழகு. நான் இவற்றை அணிந்துதான் இவ்வளவு வருடங்களாக சினிமாவில் நிலைத்து இருக்கிறேன்.

ரசிகர்கள் நாடித்துடிப்பை சினிமாவுக்கு வந்தபோதே கண்டுபிடித்து விட்டேன். அந்த ரகசியம் தெரிந்ததால்தான் இவ்வளவு வருடத்துக்கு பிறகும் கதாநாயகியாக நீடிக்கிறேன்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries