என்னை நோக்கி பாயும் தோட்டாவை உறுதி செய்த தனுஷ்

image-5தனுஷ் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘மிரட்டு’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், தனுஷ் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப்போவதை உறுதி செய்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘கொடி’ படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார்.

இந்த படத்தை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிறகு ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

கவுதம் மேனன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தேடும் படலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries