சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்திற்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அமைத்த சண்டைக் காட்சியின் போது, சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதனால் சிம்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்களின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் சிம்பு நலமாக இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ‘தள்ளி போகாதே…’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.