அப்பாவி பெண்ணாக நடிக்கும் சுனைனா

sunaina-150‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இப்படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்த சுனைனா, கடைசியாக ‘வன்மம்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜீவா, பாபி சிம்ஹா கதாநாயகன்களாவும், சுனைனாவுடன் காஜல் அகர்வாலும் கதா நாயகியாக நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் கதை குறித்து நடிகை சுனைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோடிட்டு காண்பித்துள்ளார். தற்போதைய மாடர்ன் காலத்தில் நடைபெறும் காதல் பிரேக் அப் மற்றும் மீண்டும் காதல் ஏற்படுவது தொடர்பான கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார்களாம்.

இந்த படத்தில் சுனைனா ஒருதலையாக ஜீவாவை காதலிப்பதாகவும், ஆனால் ஜீவாவுக்கு காஜல் அகர்வால் மீதுதான் காதல் என்றும், ஜீவாவை தன் பக்கம் இழுக்க சுனைனா செய்யும் முயற்சிகளும், அந்த முயற்சிகளில் இருந்து ஜீவா தப்பிக்கும் விதம்தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சுனைனா அமைதியான மற்றும் அப்பாவி பெண்ணாகவும், காஜல் அகர்வால் மாடர்ன் காலத்து போல்டான பெண்ணாகவும் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது. இப்படத்தை டி.கே. இயக்கி வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online