ஜெய்யின் புகழ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Pugazh-Movie-Stills-and-Postersஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார்.

விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடமே முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பி இருந்தனர். படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இதையடுத்து இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் மணிமாறன் தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries