மலையாள ரீமேக்கில் நடிப்பது குறித்து ரஜினி தரப்பு விளக்கம்

Rajini-to-play-the-lead-role-in-the-remake-of-Bhaskar-The-Rascalரஜினிகாந்த் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்திலும் சங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் இப்படங்களை அடுத்து அவர் சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்தது. இந்நிலையில் இந்த செய்தி வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது.

‘இப்போதைக்கு ரஜினிகாந்த் கபாலி மற்றும் ‘2.0’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தவிர அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே ரஜினியின் அடுத்த படம் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்’ என்று ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries