விஜய்யின் தெறி படத்தை பற்றி வந்த வதந்தி

CY1qhVZVAAA3h5lவிஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. இதில் சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து தற்போது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐங்கரன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் “லைக்கா நிறுவனம் ‘தெறி’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றி இருக்கிறது” என்ற தகவலை வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து ‘மீண்டும் விஜய்யோடு கைகோர்த்தது லைக்கா நிறுவனம்’ என்று செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.

சிறிது நேரத்தில் ஐங்கரன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவல் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘தெறி’ படத்தின் விநியோக உரிமை குறித்த தகவலுக்கு வருந்துகிறோம். அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருங்கள்” என்று டுவிட் செய்திருந்தார்கள்.

இதுகுறித்து ‘தெறி’ படத்தின் தயாரிப்பு தரப்பில் கேட்டபோது, “விநியோக உரிமை குறித்து பலரும் பேசி வருவது உண்மைதான். ஆனால், நாங்கள் யாருக்கும் இன்னும் அதிகாரபூர்வமாக விநியோக உரிமையை வழங்கவில்லை” என்று தெரிவித்தார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries