விஜய் சேதுபதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி

Vijay-Sethupathi-and-Seenu-Ramasamy-team-upசீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் புகழ் பெற்றவர் விஜய்சேதுபதி. இப்படம் விஜய் சேதுபதிக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியையடுத்து மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீசாகமல் தள்ளிக்கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் தற்போது சீனு ராமசாமி – விஜய்சேதுபதி கூட்டணியில் ‘தர்மதுரை’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற படத்தை சீனு ராமசாமி கொடுத்துள்ளாராம். படம் வெளியாகும் போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்று திரையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online