ரஜினி, சூர்யா பாணியில் உருவாகும் கார்த்தி படம்

karthi-latest-stills‘கொம்பன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ‘கஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு பேர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் 3டி பேஸ் ஸ்கேன் என்ற டெக்னாலஜியை பயன்படுத்தி படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த டெக்னாலஜி இதற்குமுன் ரஜினி நடிப்பில் வெளியான ‘கோச்சடையான்’ படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான ‘மாற்றான்’ படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிகையாளராகவும் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்காக பிரமாண்டமான 15 அரங்கங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு படமாக்கி வருகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online