450 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் கணிதன்

Kanithan-Coverஅதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கணிதன்’. இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.

கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா, கும்கி அஸ்வின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 26-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் திரையிடப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். சென்னையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

வருகிற பிப்ரவரி 26-ந் தேதி அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆறாது சினம்’ என்ற திரைப்படமும் வெளியாகிறது. அதேநேரத்தில், எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘நையப்புடை’ என்ற படத்தை படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries