200 ஆண்டு பழமையான பாடலுக்கு புத்துயிர் கொடுத்து ஒருநாள் கூத்து படக்குழுவினர்

57649‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஒருநாள் கூத்து’. இதில் தினேஷுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ், நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் இருநூறு வருடம் பழமையான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய ‘எப்போ வருவாரோ’ என்ற பழமையான பாடல்தான் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு இனிமையான இசையை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்துள்ளார் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பாடல் படத்திற்கு தனிச்சிறப்பை கொடுக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries