பாகுபலி தரத்துக்கு உயர்ந்த ரெமோ

sivakarthikeyan-remo-2‘ரஜினிமுருகன்’ வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ என்கிற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஏற்கெனவே, ‘ஆஸ்கார் விருது’ வென்ற சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, தேசிய விருதுகள் பல வென்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் புதிய தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் இணைந்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மகதீரா’, ‘நான் ஈ’, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட கமலக்கண்ணன் என்பவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ரெமோ’ படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

கமலக்கண்ணன் தற்போது ராஜமௌலி உருவாக்கி வரும் ‘பாகுபலி’ படத்தின் 2-ம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் உருவாகிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த வருடம் ஜூலை அல்லது செப்டம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online