வெங்கட் பிரபு புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

“Chennai-600028-sequel-not-with-Gautham-Menon”-–-Venkat-Prabhu-696x465வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த வெற்றிநடை போட்ட ‘சென்னை 600 028’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

முந்தைய பாகத்தில் நடித்தவர்களையே தனது இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வருகிற பிப்ரவரி 28-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். இப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 7-வது படமாகும். இப்படத்தில் ஜெய், சிவா, விஜய் வசந்த், நிதின் சத்யா, வைபவ், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பார்கள் என தெரிகிறது.

மேலும், யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். பிரவின் கே.எல். எடிட்டிங் பணி மேற்கொள்ளவிருக்கிறார். பர்ஸ்ட் லுக் வெளியாகும் நாளில் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரத்தை அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online