விக்ரம் சண்டைபோட பிரம்மாண்ட சுரங்கம் அமைப்பு

Iru-Mugan-Vikram-2விக்ரம் தற்போது ஆனந்த சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு அமைத்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இதில் விக்ரம், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், சென்னையில் ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கி வருகிறார்கள். அதாவது, விக்ரம் வில்லன்களுடன் பிரம்மாண்ட சுரங்கம் ஒன்றில் சண்டை போடுவதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள்.

இதற்காக பிரம்மாண்ட சுரங்கம் போன்ற ஒரு செட் அமைத்து அதற்குள் படமாக்குகிறார்கள். தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய சுரங்கம் அரங்கு அமைத்து யாரும் படமாக்கியதில்லை என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். இந்த சுரங்கத்தை கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் அமைத்துள்ளார். இவர் ‘கிரிஷ் 3’ படத்தில் பணியாற்றியவர்.

தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி, ஜுன் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries