விரைவில் டைரக்டர் ஆவேன்: நித்யா மேனன் பேட்டி

nithya-menon_143098881350நடிகை நித்யா மேனன் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிபடங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் ரசிகர்களிடம், ‘ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2’ படங்கள் அவரை பிரபலப்படுத்தியது.

‘நூற்றியென்பது, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது சூர்யாவுடன் ‘24’ என்ற படத்தில் நடிக்கிறார். விரைவில் டைரக்டராகப்போவதாக நித்யா மேனன் அறிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘எனக்கு கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் நல்ல நல்ல கதைகளை எழுதி வருகிறேன். இந்த கதைகளை வைத்து விரைவில் படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளேன். இப்போது நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு மார்க்கெட் இருப்பதுவரை நடிப்பேன். படங்கள் குறைந்ததும் டைரக்டர் ஆகி விடுவேன்.

படப்பிடிப்புகளில் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு விட்டேன். டைரக்டர்கள் என்னிடம் கேட்டால் அவர்கள் எடுக்கும் படத்தில் திருத்தங்கள் சொல்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு கதை அறிவு உள்ளது. நல்ல படங்கள் அதிகம் வரவேண்டும். அதற்காகத்தான் நான் டைரக்டராகப் போகிறேன். நான் குள்ளமாக இருப்பதாக பலர் பேசுகின்றனர்.

இதனால் எனக்கு வருத்தம் இல்லை. என்னுடன் துல்கர் சல்மான், நிதின், சந்தீப் மேனன் உள்பட பல கதாநாயகர்கள் நடித்து இருக்கிறார்கள். எல்லோருமே உயரமானவர்கள்.

சில காட்சிகளை ஸ்டூலில் என்னை நிற்க வைத்துதான் படமாக்குகின்றனர். நான் குள்ளமாக இருப்பதால் உயரமாக இருப்பவர்கள் என்மீது அக்கறை காட்டுகின்றனர். எனக்கு ஆசி வழங்கி வாழ்த்தவும் செய்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.’’

இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries