ரம்முக்கு ஓப்பனிங் கொடுத்த விவேக்-அனிருத்

428934-aniruவேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் வருடம் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர் ஹிரிஷிகேஷ். இவர் தற்போது ‘ரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை சாய் பரத் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் ஹிரிஷிகேஷுக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். விவேக் மற்றும் நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற பூஜையில் நடிகர் விவேக், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி இந்த வருடத்தின் இடையில் படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online