வட சென்னை பற்றி வெற்றிமாறன் தகவல்

Vetrimaran interview Karthika metromatinee newsவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்த ‘விசாரணை’ படத்துக்கு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் படம் வெளியாகும் முன்பே பல விருதுகளை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்க, ‘வடசென்னை’ என்னும் படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டார். இதில் தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு முடித்தவுடன் கெளதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

மேலும் ஜுன் மாதம் முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் தேதிகள் ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ‘வடசென்னை’ படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தான் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘மே மாதம் ‘வடசென்னை’ படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries