சினிமாவில் புகழ்பெற அதிர்ஷ்டம் வேண்டும்: கீர்த்தி ஷெட்டி

Actress-Keerthi-Shetty-Latest-Stills1-2சுசீந்திரன் இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி.

இதை தொடர்ந்து ‘சகாக்கள்’, ‘கொண்டான் கொடுத்தான்’, ‘பாண்டியநாடு’, ‘மாங்கா’ படங்களிலும் நடித்தார். என்றாலும் எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை. இப்போது ‘செவிமி’ என்ற படத்தில் நடிக்கிறார். இது பற்றி கேட்ட போது….

‘‘நான் கன்னட நடிகை என்றாலும், தமிழ் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறேன். அனைத்தும் முக்கிய படம். குடும்பபாங்கான பாத்திரம் என்றாலும் எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை. நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

கவர்ச்சியான வேடத்தில் நடிப்பது பிரச்சினை இல்லை. ஆனால் குடும்ப பாங்கான வேடத்துக்குத் தான் நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன்.

இதனால் தான் குடும்பபாங்கான வேடங்களில் விரும்பி நடிக்கிறேன். இப்போது நான் நடிக்கும் ‘செவிலி’ படமும் குடும்பபாங்கான நல்ல வேடம். நான் இதுவரை நடித்த பாத்திரங்களில் இது மிகவும் பிடித்தது.

படங்களில் எனது நடிப்பு நன்றாக அமைந்தது. என்றாலும் எதிர்பார்த்தபடி நான் பிரபலம் ஆகவில்லை. திறமை மட்டும் இருந்தால் போதாது படம் நன்றாக ஓடினால்தான் பிரபலம் ஆகமுடியும்.

பெயரும், புகழும் கிடைக்கும். நடிப்புத்திறமை மட்டும் இருந்தால் போதாது. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும். இதுவரை திறமையை மட்டும் நம்பி இருந்த எனக்கு இப்போது அதிர்ஷ்டம் மீதும் நம்பிக்கை வரத் தொடங்கி இருக்கிறது’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online