ஜி.வி.பிரகாஷ் படத்தை 55 நாட்களுக்குள் முடிக்க ராஜேஷ் முடிவு

plcpvwfdihfcb‘அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படங்களின் தோல்விக்கு பிறகு ஒரு புதிய அணியுடன் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார் எம்.ராஜேஷ். அதன்படி, தனது அடுத்த படமான ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதேபோல், தன்னுடைய படங்களில் காமெடிக்கு வழக்கமாக பயன்படுத்தும் சந்தானத்தை இந்தமுறை கழட்டிவிட்டு, ‘நானும் ரௌடிதான்’ படத்தில் காமெடியில் கலக்கிய ஆர்.ஜே.பாலாஜியை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், நிக்கி கல்ராணி, ஆவிகா கோர், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இதில் நடிக்கவிருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்கான வசனங்கள் எழுதும் பணியில் மும்முரமாக இருக்கும் ராஜேஷ், வருகிற மார்ச் 2-வது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம். தொடர்ந்து ஏப்ரல் 10-ந் தேதி முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளார்.

அதன்பிறகு, சிறிது இடைவெளி கொடுத்துவிட்டு ஏப்ரல் இறுதியில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி, இடைவிடாது படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார். 55 நாட்களுக்குள் இப்படத்தை எடுத்துவிட முடிவு செய்துள்ள்ளார்.

‘கடவுள் இருக்கிறான் குமாரு’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தைப் போன்று இதுவும் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries