அப்பாவுடன் நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்: ஸ்ருதி ஹாசன்

Shruti-Haasan-with-Kamal-Haasanதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனி இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது தந்தை கமல்ஹாசன் உலகம் அறிந்த பெரிய நடிகர். என்றாலும், தந்தையும் மகளும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. புதிய படத்தில் கமலுடன் அவரது மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி. இது பற்றி அவரிடம் கேட்ட போது…

‘‘நான் சினிமாவில் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆனபிறகு, இப்போது தான் எனது அப்பாவுடன் நான் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதுவும் மகளாகவே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக காத்திருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

அப்பாவுடன் இணைந்து நடிப்பது சவாலான விஷயம். இந்த படத்தில் சிறப்பாக நடிக்க கடினமாக உழைப்பேன். அதுதான் என்னுடைய வேலை மற்ற விஷயங்கள் கடவுள் கையில் தான் இருக்கிறது. நான் அப்பாவுடன் இணைந்து பணி புரியும் நாளுக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online