சிபிராஜுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

aishwarya-rajesh-759‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அருள்நிதியுடன் நடித்துள்ள ‘ஆறாது சினம்’ நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தைப் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இவர் அறிமுக இயக்குனர் ஆர்.மணிகண்டன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிபிராஜுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் கதை பிடித்துவிட்டதாகவும், விரைவில் இப்படத்தில் கையெழுத்திட்டு ஒப்பந்தமாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘ஈரம்’ பட இயக்குனர் அறிவழகனின் முன்னாள் உதவி இயக்குனராக இருந்த மணிகண்டன், சிபிராஜ் கூட்டணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துப்பறியும் திரில்லர் படம் உருவாக இருந்தது. பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த புதுப்படம் டார்க் காமெடி படமாக உருவாகவுள்ளது. ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் மூலம் பிரபலமான சமீர் சந்தோஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online