கேடி பில்லா கில்லாடி ரங்கா இரண்டாம் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ்?

darlingபாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. இப்படத்தில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

நட்பு மற்றும் காதலை மையப்படுத்தி நகைச்சுவை படமாக வெளிவந்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது பாண்டிராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இன்னொரு நாயகனாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனையிலும் பாண்டிராஜ் இறங்கியுள்ளாராம்.

ஜி-வி.பிரகாஷ் கைவசம் தற்போது ஏகப்பட்ட படங்கள் உள்ளன. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படமும் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. எனவே, அதன்பிறகே இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries