சண்டக்கோழி 2-ம் பாகம் கைவிடப்பட்டது: விஷால் அறிவிப்பு

sandakozhi2விஷால் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சண்டக்கோழி’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்த படத்தில் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து விஷாலும், லிங்குசாமியும் இணைந்து ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தீவிரம் காட்டினர். முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரணும், மீரா ஜாஸ்மினும் மீண்டும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும், சத்யராஜ், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

வருகிற மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க இருந்த நிலையில், தற்போது இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக விஷால் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே, ‘சண்டக்கோழி’ படம் கைவிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

லிங்குசாமி கடைசியாக இயக்கிய ‘அஞ்சான்’ படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, தயாரிப்பு பணியில் தீவிரம் காட்டிய லிங்குசாமிக்கு அதிலும் பெரும் நெருக்கடியை சந்தித்தார். இப்போது ‘சண்டக்கோழி 2’ படமும் கைவிடப்பட்ட நிலையில், லிங்குசாமியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online