அதர்வாவை விஜய்யோடு ஒப்பிட்ட ரஜினி

Cb47kXYVIAEgl9Oஅதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘கணிதன்’ படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தை டி.எம்.சந்தோஷ் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, இப்படத்தை கலைப்புலி தாணு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.

படத்தை இடைவெளி இல்லாமல் பார்த்த ரஜினி, அரை மணி நேரம் படத்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். மேலும், அறிமுக இயக்குனர் ஒருவருக்கு படவாய்ப்பு கொடுத்ததற்கு தாணுவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அதர்வாவை பார்க்கும்போது விஜய்யை பார்த்ததுபோல் இருப்பதாகவும், இப்படத்தை இயக்கிய டி.எம்.சந்தோஷை தான் பார்க்க விரும்புவதாகவும் அவரிடம் கூறியுள்ளார்.

ரஜினியிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது படக்குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ரஜினி சார் என்னுடைய பெயரை உச்சரித்ததே நான் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் என்று இயக்குனர் டி.எம்.சந்தோஷ் சந்தோஷத்தில் உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries