அம்மா வேடத்தில் நடிப்பதால் கதாநாயகி வாய்ப்பு பாதிக்காது: ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya_Rajesh_2572871g‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதை தொடர்ந்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’ உள்பட பல படங்களில் நடித்தார். ‘காக்கா முட்டை’ படத்தில் குப்பத்து பெண்ணாக 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். இந்த பாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன.

இப்போது மீண்டும் அருள்நிதியின் ‘ஆறாது சினம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2 குழந்தைகளின் தாயாக நடித்திருக்கிறார். இதுகுறித்து கேட்ட போது…. ‘‘இந்த படத்தில் நான் நடித்திருப்பது மிகவும் நல்ல பாத்திரம். குழந்தைகளின் தாயாக நடித்திருக்கிறேன்.

அம்மா வேடத்தில் நடிப்பது தவறல்ல. அம்மாவாக நடித்தால் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று சிலர் கூறுவது உண்மையல்ல. நான் தற்போது 6 படங்களில் நடித்து வருகிறேன். நாயகி வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. கொடுத்த பாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதுதான் முக்கியம்.

ஏற்கனவே நான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த காரணமான படங்களை இயக்கிய டைக்டர்களின் படங்களில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதே எனது லட்சியம்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries