நடிகைகளுக்குள் போட்டி இருப்பது அவசியம்: அனுஷ்கா

anushka-shettyநடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நடிகைகளுக்குள் ஒருவருக்கொருவர் பொறாமை இருக்கும் என்றும் ஒரு நடிகைக்கு பெயரும் புகழும் கிடைப்பதை இன்னொரு நடிகை விரும்பமாட்டார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன். பழைய நடிகைகள் மத்தியில் அடிக்கடி தகராறுகள் நடக்கும் என்றும் கூறுவார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒருவருக்கொருவர் நட்பாக பழகுகிறார்கள். ஒரு நடிகை திறமையாக நடித்து இருந்தால் அவரை போனிலோ நேரிலோ பாராட்டுகிறார்கள். இது ஆரோக்கியமான நிலைமை ஆகும். மற்ற நடிகைகள் சிறப்பாக நடித்து இருந்தால் அவர்களை நான் பாராட்ட தயங்க மாட்டேன்.

‘லிங்கா’ படத்தில் நானும் சோனாக்சி சின்காவும் இணைந்து நடித்து இருந்தோம். சோனாக்சி பிரமாதமாக நடித்து இருந்தார். நான் அவரை தொடர்பு கொண்டு நடிப்பை பாராட்டினேன். படம் ஓடாவிட்டாலும் உன் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று கூறினேன். இதுபோல் தமன்னாவையும் பாராட்டி இருக்கிறேன்.

நடிகைகளுக்குள் பொறாமை இருக்கக்கூடாது. ஆனாலும் நடிப்பில் போட்டி இருப்பது அவசியம். நானும் இதர நடிகைகளும் நட்பாக பழகுகிறோம். ஆனாலும் எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. போட்டி இல்லை என்றால் சாதிக்க முடியாது. மற்ற நடிகைகளை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நடிகையும் நினைக்க வேண்டும்.

அதற்கான கதாபாத்திரங்களை தேட வேண்டும். அப்படி போட்டி மனப்பான்மை இருந்தால் தான் முன்னேற முடியும். ஒரு நடிகை நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றால் அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கலாம் என்று நடிகைகள் நினைப்பது உண்டு. அதில் தவறு இல்லை.

கடவுள் தயவால் எனக்கு எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்தன. பாகுபலி இரண்டாம் பாகம் வேடமும் நன்றாக அமைந்து இருக்கிறது. என்மேல்தான் எனக்கு பொறாமை இருக்கிறது.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online