அடுத்தவர்கள் சொல்வதை பற்றி புதுமுகங்கள் கவலைப்பட வேண்டாம்: பாண்டியராஜன்

19-pandiyarajan-200ரபி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘நேர்முகம்’. முரளி கிருஷ்ணா இயக்கி, இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்கள் சி.டி.யை நமீதா வெளியிட பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய நடிகர் பாண்டியராஜன்…. ‘என்னோட முதல்படம் ஆண்பாவம். விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுனோம். ஒருத்தர் நேரா வந்தார். எல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஆனா நீ ஏன்யா நடிச்சன்னார்? எனக்கு பகீர்னு ஆயிருச்சு.

வேற வழியில்லாம தயாரிப்பாளர் தன்னோட சொத்து கித்தெல்லாம் வித்து படத்தை ரிலீஸ் பண்ணினார். பல்லாவரத்துல படம் ஓடுற தியேட்டருக்குப் போயிருந்தேன்.

படமே ரொம்ப டல்லா தெரிஞ்சது. மொத்தமே 20பேர் தான் படம் பார்த்துட்டு இருந்தாங்க. வீட்டுக்கு வந்து எங்கம்மா மடியில படுத்துட்டு என் படத்தை நான் நடிச்சுக் கெடுத்திட்டேன்மான்னு அழுதேன். தயாரிப்பாளர் மனசுக்குள்ள அழுதார். அன்னைக்கு நைட் ஷோ, அபிராமி தியேட்டர்ல மானேஜரிடம் கூட்டம் எப்டி இருக்குன்னு கேட்டேன். ஹவுஸ் புல்னு சொன்னார்.

நம்ம படத்துக்கு வந்த கூட்டம் இல்ல, படிக்காதவன் படத்துக்கு வந்த கூட்டம், டிக்கெட் கிடைக்காம நம்ம படம் பாக்கிறாங்கன்னு சொன்னார். உடனே கிளம்பி அபிராமி தியேட்டர் போனேன். படம் பாத்த கூட்டத்துல ஒருத்தர், “ஏய், நீதான நடிச்சிருக்க”ன்னு கேட்டார். ஆமான்னு தலையாட்டினேன். ஒரு கையெழுத்து போட்டுக் குடுன்னார். போட்டுக் குடுத்தேன்.

இதை ஏன் சொல்றேன்னா, நேர் முகம் படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்யுங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.

‘நேர்முகம் படம் பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள்’ என்றார்.

​நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, மீராநந்தன், பிரஜின், கூல் சுரேஷ், இயக்குனர் முரளி கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries