திருநங்கையாக நடிக்கும் விக்ரம்

Iru-Mugan-Shooting-Spot-Stills-3விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் விக்ரம் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் ஒன்று திருநங்கை கதாபாத்திரம்.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக திருநங்கைகளின் நடை உடை பாவனைகள், அவர்களின் பேச்சுமொழி உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார் விக்ரம்.

இப்போது ‘ரா’ உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே நடத்தி வருகிறார்கள். பின்னர், திருநங்கை கதாபாத்திரத்துக்கு தன்னைத் தயார்படுத்த தொடங்குவார் விக்ரம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online