விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ரித்திகா சிங்

ritika-singh-vijay-sethupathi-manikandan-27-1456559976விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கி வரும் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக தற்போது ‘இறுதிச்சுற்று’ மூலம் புகழ் பெற்ற ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு இப்படத்தில்தான் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ரித்திகா சிங். இப்படத்தின் எடிட்டராக ‘கிருமி’ இயக்குநர் அனுசரண் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பு மார்ச் 7 முதல் தொடங்கவிருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries