தெறி டப்பிங்கை முடித்த சமந்தா

Samantha-about-working-in-Theriசமந்தா தற்போது ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் நாயகனாகவும் சமந்தாவுடன் எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமந்தா இப்படத்தின் தனது டப்பிங் பணியை முடித்து கொடுத்திருக்கிறார். சமந்தா இதற்குமுன் ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘10 எண்றதுக்குள்ள’ படங்களில் அவரே டப்பிங் கொடுத்துள்ளார்.

தெறி டப்பிங் முடிந்ததை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சமந்தா, ‘என் மனதுக்கு நெருக்கமான அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குனர் அட்லிக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ‘தெறி’ படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்து விட்டன. மார்ச் மாதம் ஆடியோவையும், ஏப்ரலில் படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries