பிச்சைக்காரர்களுடன் உட்கார்ந்து உண்மையாகவே பிச்சை எடுத்தேன்: விஜய் ஆண்டனி

vijay-antony-pics-from-salim-movie_140125095220விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இசை அமைத்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. சட்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இதை சசி இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படம் பற்றி இயக்குனர் சசி கூறும் போது…

‘‘இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல. சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை. இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை’’ என்றார்.

விஜய் ஆண்டனி பேசும்போது, “என்னை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே இயக்குனர் சசி தான். அவர் சொன்ன கதை இது. இந்தப் படத்தை தயாரித்து நடித்தற்காகப் பெருமைப்படுகிறேன்.

இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களுடைய கதைகளை கேட்டேன்.

மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா, இப்படி பல காரணங்கள்… நாம் அவர்களை மிக சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம்.

அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம். ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான். பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது. நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்தை வாங்கிய கே.ஆர்.பிலிம்ஸ் சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க .. பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?’ன்னு கேட்டு இருப்பாங்க. ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினார்.

என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை இல்லன்னா நான் இல்ல. இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries