டைரக்டர் லிங்குசாமி மீது நடிகர் விஷால் புகார்

its-fake-news-about-vishalவிஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண் நடித்து 2005-ல் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘சண்டக்கோழி’. லிங்குசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. லிங்குசாமியே இதையும் டைரக்டு செய்வதாக இருந்தது. விஷால் இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிக்கவும் முன் வந்தார்.

இதற்காக நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்தது. லிங்குசாமிக்கு சம்பள முன்பணமாக ரூ.3 கோடியை விஷால் கொடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது விஷால் ‘மருது’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ராஜபாளையம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும் சண்டக்கோழி-2, படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் லிங்குசாமி திடீரென்று அல்லு அர்ஜுனை வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தை இயக்க போய்விட்டார். அந்த படத்தை முடித்து விட்டு ‘சண்டக்கோழி-2’ படத்தை இயக்குவதாக தெரிவித்தாராம். இதனை விஷால் ஏற்கவில்லை. சண்டக்கோழி படத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.

இதுகுறித்து டுவிட்டரில் விஷால் கூறும்போது, ‘‘சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணிமீது கவனம் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், டைரக்டர்கள் படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்துவது நல்லது. ‘சண்டக்கோழி-2’ படம் கைவிடப்படுகிறது’’ என்று தெரிவித்து இருந்தார்.

லிங்குசாமி மீது புகார் கூறியதுடன் தான் கொடுத்த சம்பள முன்பணத்தை அவர் திருப்பித்தர வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries