ஏமாற்றி விட்டதாக கூறிய தொழில் அதிபர் மீது மேக்னா ராஜ் போலீசில் புகார்

meghana-raj-hot-photogallery-_39_தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’ படங்களில் நடித்தவர் மேக்னாராஜ். பழம்பெரும் கன்னட நடிகர் சுந்தர்ராஜின் மகளான இவர் 2009–ம் ஆண்டு ‘பெந்து அப்பாராவ்’ தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தருமபுரியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜனார்த்தனன் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மேகரிக்கு இ–மெயில் மூலம் ஒரு புகார் அனுப்பினார்.

அதில், ‘நடிகை மேக்னாராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை எடுத்துச் சென்று விட்டார்’ என்று கூறி இருந்தார். இதை நடிகை மேக்னா மறுத்தார். இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மேகரிக் உத்தரவின்படி தொழில் அதிபர் ஜனார்த்தனனை பெங்களூர் போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தொழில் அதிபர் ஜனார்த்தனனின் புகாரை போலீசார் தள்ளுபடி செய்தனர். இதை அதிகாரப் பூர்வமாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பொய் புகார் கொடுத்ததாக தொழில் அதிபர் ஜனார்த்தனன் மீது மேக்னா சார்பில் அவரது தாயார் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறி இருந்தார். இப்போது புகார் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries