அதர்வா இடத்தை பிடிக்கும் அல்லு அர்ஜுன்

allu-arjun-759அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கணிதன்’. இதில் கேத்ரின் தெரசா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சந்தோஷ் இப்படத்தை இயக்கியிருந்தார். போலி சான்றிதழ் பற்றிய படமாக இப்படம் உருவாகியிருந்தது.

இதில் அதர்வா நிரூபராக நடித்திருந்தார். தற்போது இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை பார்த்து தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. முதல் கட்டமாக தெலுங்கில் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள். அதே போல் இந்தியில் இந்த படத்தில் அர்ஜுன் கபூர் நடிக்கவுள்ளாராம்.

தெலுங்கு ரீமேக்கில் தமிழில் நடித்த கேத்ரின் தெரசாவும், இந்தியில் முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online