குற்றமே தண்டனை படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

composer-k-to-work-in-the-upcoming-vijay-sethupathi-manikandan-film-photos-pictures-stills‘காக்கா முட்டை’ படம் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் எம். மணிகண்டன். இவர் அடுத்ததாக ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நாயகனாக விதார்த் நடித்துள்ளார். மேலும் நாசர், ரஹமான், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா பாலு, குரு சோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டான் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டார். இதை இப்படத்தின் நாயகன் வித்தார்த்தும், இயக்குனர் மணிகண்டனும் பெற்றுக் கொண்டனர். ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை உலகமெங்கும் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online