அமெரிக்காவில் நாளை ஆஸ்கார் விருது வழங்கும் விழா – 8 படங்கள் போட்டி

Oscar-statuettes_3197387bஅமெரிக்காவில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது. சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது. இந்த விழா ஆண்டு தோறும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ்ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஹாலிவுட்டில் நடக்கிறது.

இந்த ஆண்டுக்கான 88–வது ஆஸ்கார் விருது நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படுகிறது. விழா இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. அதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு இரவு பகலாக அலங்கார வேலை நடந்து வருகிறது.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் ‘தி ரெனவன்ட்’, ‘மேட்மேக்ஸ்’, ‘புரி டேரட்’ உள்ளிட்ட 8 படங்கள் விருது போட்டி பட்டியலில் உள்ளன.

அதே போன்று வியார்னடோ, டி காப்ரியோ உள்ளிட்ட 5 பேர் சிறந்த நடிகருக்கான போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online