எந்திரன் 2-வில் இணைந்த அக்ஷய்குமார்

akshay-kumar_640x480_61450319026‘எந்திரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மீண்டும் ரஜினியை வைத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தொடங்கவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கபாலி’ படப்பிடிப்பிற்காக இப்படத்திற்கு சற்று இடைவெளிவிட்ட ரஜினி தற்போது மீண்டும் இதில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இதற்காக அக்ஷய்குமார் தற்போது சென்னை வந்துள்ளார். சென்னைக்கு வந்த அக்ஷய்குமாருக்கு படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர். விரைவில், தொடங்கவிருக்கும் 2.0 படப்பிடிப்பில் அக்ஷய்குமார் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries