மனிதன் படப்பிடிப்பு முடிந்தது

CccMK_3UEAABdG1‘கெத்து’ படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மனிதன்’. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய இயக்குனர் அஹமத் இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யை தொடர்ந்து ஹன்சிகா இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்தியில் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக்காக இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சாலக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்திருக்கின்றனர். இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online